சுண்டு நோய் :
அறிகுறிகள்:
- சுண்டு நோயின் முதல் அறிகுறியாக வேர்களில் சிறிய பழுப்பு நிற புள்ளியிலிருந்து கருமை நிறத்தில் வளர்ந்து பின்பு புள்ளிகள் ஒன்று சேர்ந்து காணப்படும்
- கிழங்கின் வேர் பகுதிகள் நிறம் மாறும் வரை, புள்ளிகள் பெரிதாகிக் கொண்டு இருக்கும்.
- செந்நிற தோலுடைய கிழங்குகளில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். சிவப்புநிற தோலுடைய கிழங்கில் கரும் புள்ளிகள் தோன்றும்
- கிழங்கின் தோல் பகுதி நோயில் பாதிப்படைந்தாலும் உள் திசுக்களில் நோய் நேரடியாக தாக்காததால் பாதிக்கப்பட்ட தோல் பகுதியினை எளிதில் அகற்றி விடலாம்.
- அதிகளவில் பாதிக்கப்படட கிழங்குகளில் வெடிப்புகள் காணப்படும். இறுதியில் கிழங்கில் நீர் குறைவினால் சுருங்கிவிடும். சுண்டு நோய் பாதிக்கப்பட்ட கிழங்கில் பூஞ்சான்கள் எளிதில் தாக்கக்கூடும்.
- கிழங்குகளை கிடங்குகளில் சேமிப்பதினால் சுண்டு புள்ளியின் பாதிப்பு மிகவும் அதிகரிக்கும். அதிக ஈரப்பத நிலையினாலும் புதிய சுண்டு புள்ளிகள் தோன்றும். 750 பே வெப்ப நிலையில் கிழங்கில் நோய் எளிதில் பாதிக்கப்படும். ஈரப்பதத்திலேயே பரவிவிடும். செடி வளர்வதற்கான ஈரப்பதமான மண்ணிலும் நோய் நன்கு வளரக் கூடியவை.
கட்டுப்பாடு:
- நோய் தாக்கப்படாத பூஞ்சான் உபயோகித்த சக்கரை வள்ளி கிழங்கின் வேறுகளை உபயோகிக்க வேண்டும்
- மண்ணிலிருந்து மேல் பரப்பில் உள்ள கொடியினை ஒரு அங்குல அளவில் துண்டு செய்து மற்றும் பூஞ்சான் கொல்லியில் நனைத்து வயல் வெளியில் கிழங்கின் கொடியினை நடவும். பின்பு 3-4 வருடங்களுக்கு சக்கரை வள்ளி கிழங்கினை ஊடுபயிராக பயிரிடவும்
|
|